January 19, 2018
தண்டோரா குழு
நடிகர் சூர்யா சிறந்த பண்புகளையும், அதிக பொறுமையையும் கொண்டவர்.இந்நிலையில் முதன்முறையாக தன்னுடைய பொறுமையை இழந்து நடிகர் சூர்யா ஆந்திராவில் நடுரோட்டில் இறங்கி ரசிகர்களிடம் கோபம் கொண்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தமிழில் உருவான தானா சேர்ந்த கூட்டம் படம் தெலுங்கில் கேங் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. அப்படம் வெளியான பிறகு சூர்யா ஆந்திரா முழுவதும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகிறார்.
அப்போது சூர்யா காரை பின் தொடர்ந்து வந்த ரசிகர்கள் மோசமாகவண்டி ஓட்டியுள்ளனர், அதுவும் ஹெல்மெட் இல்லாமல்,இதனைப் பார்த்த சூர்யா கோபமடைந்து ரோட்டில் இறங்கி ரசிகர்களை திட்டியுள்ளார்.தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.