June 9, 2018
தண்டோரா குழு
காலா படத்தில் பயன்படுத்தப்பட்ட ஜீப்பை மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திராவுக்கே நடிகர் தனுஷ் பரிசாக வழங்கியுள்ளார்.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.இப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் காலா படத்தில் இடம் பெற்றிருந்த ஜீப்பை தங்களுடைய நிறுவனத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்க நடிகர் தனுஷிடம் மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா கேட்டிருந்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த தனுஷும் காலா ஜீப்பை அந்த நிறுவனத்தின் தலைவருக்கு பரிசாக அளித்துள்ளார்.இதை ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்துள்ளார்.