April 20, 2018
தண்டோரா குழு
கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.இப்படத்தை நடிகர் தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.
கடந்த மார்ச் 16-ஆம் தேதி முதல் சில கோரிக்கைகளை முன் வைத்து திரைப்பட பணிகளை நிறுத்துமாறு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்தானது.கடந்த 1ம் தேதியிலிருந்து எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை.இதனால் காலா ரிலீஸ் தாமதமாக வாய்ப்புள்ளதாகவும்,தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் முடிந்ததும் வரிசை அடிப்படையில் இந்த மாத படங்கள் வெளியாகும் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், காலா படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.