June 7, 2018
தண்டோரா குழு
கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.
பல்வேறு சர்ச்சைக்கு பின் இப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது.காவிரி ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் காலா படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில்,பைரஸி இணையதளமான தமிழ் ராக்கர்ஸ் காலா தியேட்டர்களில் ரிலீஸாவதற்கு முன்பே எங்களது இணையத்தில் லீக்காகும் என சவால் விட்டிருந்தனர்.இந்நிலையில்,சொன்னபடி காலா படம் தியேட்டர்களில் ரிலீஸாவதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸில் வெளியிடப்பட்டிருப்பது ரசிகர்கள்,படக்குழுவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனினும் காலா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.