July 15, 2017
தண்டோரா குழு
ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்தவர் தான் அட்லீ. அந்த அங்கீகாரத்தோடு தன் முதல் படமான ராஜா ராணி படத்தை இயக்கினார்.
அதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கி தற்போது மீண்டும் விஜயுடன் இணைந்து மெர்சல் படத்தை இயக்கி வருகிறார்.
அட்லீ்க்கு விஜய் வைத்து இயக்க வேண்டுமென்பது தான் ஆசையாக இருந்துள்ளது. அதனை அறிந்த விஜய் ‘தெறி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்தார்.
இந்நிலையில் ஷங்கரின் மற்றொரு உதவி இயக்குநர் விக்னேஷ்குமார்.இவர் தான் இயக்கும் முதல் படத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவதாகவும், அவருக்காக மாஸ் கதை ஒன்றை வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தானும் அப்படத்தில் அஜித்துடன் சிறப்பு வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் கூறியுள்ளார்.
விஜய்யை போல் இவரது ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.