July 14, 2017
தண்டோரா குழு
பாலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தி சயிஷா. இவர் வனமகன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகமானர்.
ஆனால் அறிமுகம் ஆன ஒரு படத்திலேயே பலரின் கனவுக்கன்னியாக மாறியுள்ளார் சயீஷா. தற்போது, இவருக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதாம்.
இதனால் , தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வசதியாக ஹைதராபாத்தில் வீடு எடுத்து சயிஷா தங்கியுள்ளார்.
நடிகை சமந்தா வசித்த வீட்டை தான் தற்போது சயிஷா விலை கொடுத்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.