March 15, 2018
தண்டோரா குழு
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம் ஆண் தேவதை. தாமிரா ஏற்கனவே பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோரின் நடிப்பில், ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கி, பாராட்டுகளைப் பெற்றவர்.
இவர், தற்போது ஆண் தேவதை படத்தை இயக்கியுள்ளார்.இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், கவின், கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இது முழுக்க சென்னை பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியானது. இதனை இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் வாசுதேவ் மேனன், சீனு ராமசாமி, ரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் விஜய்சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனி, ஜெயம் ரவி ஆகியோர் வெளியிட்டனர்.