June 25, 2018
தண்டோரா குழு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலக்கியது.
இப்படத்திற்கு இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதற்கு முன் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் ஆகிய விஜய் படங்களுக்கு ரகுமான் இசையமைத்துள்ளார். எனினும், அந்த படங்களுக்கு விஜய்க்கு என்று ஏ.ஆர். ரஹ்மான் தனி தீம் ம்யூசிக் ஏதும் போடவில்லை. ஆனால், தற்போது உருவாகி வரும் சர்கார் படத்தில் விஜய்க்கு முதன்முதலாக ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்பெஷல் தீம் மியூஸிக் ஒன்றைப்போட்டுள்ளார்.
‘சர்கார்’ படத்தின் மோஷன் போஸ்டரில் அந்த தீம் மியூஸிக்கின் சிறிய பகுதி மட்டும் இடம்பெற்றது. இந்த தீம் மியூஸிக்குக்கான மாண்டேஜ் காட்சிகள், அமெரிக்க மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸில் படமாக்கப்பட இருக்கிறது.