November 7, 2018
தண்டோரா குழு
துப்பாக்கி,கத்தி படங்களின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’.சன்பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படம் நேற்று வெளியானது. சர்கார் படம் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகி முதல் நாளிலே மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
இந்தப் படத்தை பார்த்து விட்டு பல திரைத்துறை பிரபலங்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சர்கார் படம் குறித்து பிரபல இயக்குநர் சுசீந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,
“ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் சார் நடிப்பில் இந்த ‘சர்கார்’ மிகச்சிறந்த அரசியல் திரைப்படம். விஜய் சாரின் நடிப்பு முருகதாஸ் சாரின் திரைக்கதை மிக நேர்த்தி. ஹாட்ரிக் வெற்றிக் கூட்டணிக்கு வாழ்த்துகள். இந்த மாதிரியான அரசியல் மாற்றம் நடந்தால் நல்லா இருக்கும்” என்று கூறியுள்ளார்.