December 10, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தில் மட்டுமே தலைகாட்டி வந்த விஜய் சேதுபதி ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகனாக அறிமுகமானார்.
அதன் அடுத்து வெற்றி படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இதுமட்டுன்றி 2018-ம் ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெயரைத் தட்டிச் சென்றுள்ளார். இவரது நடிப்பில் விரைவில் சீதக்காதி படம் வெளியாகவுள்ளது. மேலும், 2019 பொங்கலுக்கு வெளியாகவுள்ள ‘பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பு மட்டுமின்றி பாடகர், வசனகர்த்தா, தயாரிப்பு என பல தளங்களில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், தற்போது, நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அறிமுகமாகவுள்ளார். சன் தொலைக்காட்சியில் இவரது நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.
என்ன நிகழ்ச்சி, எப்போது ஒளிபரப்பு உள்ளிட்ட விஷயங்களை விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..