January 14, 2019
தண்டோரா குழு
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குநர் பொன்ராம். இறுதியாக சிவகார்த்திகேயனை வைத்து சீமராஜா படத்தை இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
தொடர்ந்து மூன்று படங்களை சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வந்த பொன்ராம் தன் அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிட்டார். இதற்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்த பொன் ராம் அப்படத்தில் விஜய் சேதுபதி நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதி அவரை அணுகி இருக்கிறார். அக்கதை விஜய் சேதுபதிக்கும் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் , இருவரும் இணைந்து படம் பண்ணுவது உறுதியாகியுள்ளதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. தயாரிப்பாளர் யார், எப்போது படப்பிடிப்பு என்பது விரைவில் தெரியவரும்.
விஜய் சேதுபதி தற்போது, சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாமனிதன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்க்கது.