March 21, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் நண்பரும் நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார்.மகளிர் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கிய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார்.
இந்த படத்தின் கதை இதுவரை யாரும் தொடாத, பெண்கள் கிரிக்கெட்டை பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.