February 17, 2018
tamilsamayam.com
சிவகாா்த்திகேயனின் புதிய படத்திற்கான பெயா் மற்றும் பா்ஸ்ட்லுக் போஸ்டா் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ரசிகா்கள் பொிதும் எதிா்பாா்த்து வந்த சிவகாா்த்திகேயனின் புதிய படத்திற்கான பா்ஸ்ட்லுக் போஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பெயரும் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு ரசிகா்கள் பொிதும் எதிா்பாா்த்து வந்த சிவகாா்த்திகேயனின் புதிய படத்திற்கான பா்ஸ்ட்லுக் போஸ்டா் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் பெயரும் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி படத்திற்கு “சீமராஜா” என்று பெயாிடப்பட்டுள்ளது.
சிவகாா்த்திகேன், பொன்ராம் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபா் சங்கம், ரஜினி முருகன் படத்தை தொடா்ந்து இக்கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றி வருகிறது. இப்படத்திற்கான பெயா், பா்ஸ்ட்லுக் போஸ்டா் இரவில் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து ரசிகா்கள் உற்சாகமடைந்துள்ளனா்.
பா்ஸ்ட் லுக் போஸ்டாில் சிவகாா்த்திகேயன் குதிரை மீது அசத்தலாக அமா்ந்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் அவரது கையில் ஒரு கொடியும் இடம் பெற்றுள்ளது. படத்தின் பெயருக்கு அருகில் இரண்டு சிங்கங்கள் லோகோ வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இப்படம் வரலாற்று படமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.