May 31, 2018
தண்டோரா குழு
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா.இயக்குனர் சுசீந்திரனின் நான் மகான் அல்ல,ராஜபாட்டை,ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்களுக்கு யுவன் தான் இசையமைப்பாளர்.எனினும் ஒரு சில காரணங்களால் இந்த கூட்டணி பிரிய,அதை தொடர்ந்து தற்போது ‘சாம்பியன்’ என்ற கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் சமீபத்தில் இணைந்தனர்.
இந்நிலையில்,தற்போது என்ன ஆனது என்று தெரியவில்லை,அந்த படத்திலிருந்தும் யுவன் விலகிவிட்டார், இவருக்கு பதிலாக அரோல் குரோலியை கமிட் செய்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.