June 10, 2017
தண்டோரா குழு
சுவாதி கதை குறித்து திரைப்படம் எடுத்த இயக்குநர் ரமேஷ் செல்வன் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி என்ற மென்பொறியாளர், 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இவரது மரணம் தொடர்பாக ராம்குமார் என்பவர் கைது செய்யபட்டு அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, சுவாதி கொலை வழக்கு என்ற தலைப்பில் இயக்குநர் ரமேஷ் செல்வன் படம் எடுத்து வருகிறார். இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதையடுத்து சுவாதியின் தந்தை சுவாதி கொலை வழக்கு திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரி, டிஜிபி-யிடம் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில், சுவாதியின் தந்தை கோபால கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில், படத்தை இயக்க சுவாதியின் தந்தையிடம் அனுமதி பெறாதது, வழக்கு நிலுவையில் உள்ள போது படம் எடுத்தது உள்ளிட்ட 3 காரணங்களால் இயக்குனர் ரமேஷ் செல்வன் மீது மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்