May 24, 2018
தண்டோரா குழு
கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் பா.இரஞ்சித்தின் ‘காலா’ நடித்துள்ளார்.இப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாகவுள்ளது.
ரஜினி தனது அடுத்த படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்குராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்கவுள்ளார்.விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.இப்படம் படப்பிடிப்பு துவங்குவதற்காக பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு மகன்களாக பாபி சிம்ஹா மற்றும் ‘ஜில் ஜங் ஜக்’ புகழ் சனந்த் ரெட்டி இருவரும் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் கசிந்துள்ளது.எனினும்,இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.