March 24, 2018
தண்டோரா குழு
தயாரிப்பாளர் சங்கம் தங்களுக்கு பாதகம் வராதவாறு, சட்டதிட்டங்களை மாற்றியமைக்க கோரி அரசிடம் கோரிக்கை வைத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் புது படங்கள் எதுவும் வெளியாகவில்லை.தயாரிப்பாளர்களுக்கு இருக்கும் மிக பெரிய பிரச்சனையாக இருப்பது சம்பளம் கொடுப்பதுதான். நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,நடிகர் சூர்யா தயாரிப்பாளரின் சுமையை குறைக்கும் விதமாக தனது உதவியாளர்களுக்கு இனி தாமே தனிப்பட்ட முறையில் சம்பளம் கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.சூர்யாவின் இந்த முடிவிற்கு பெரும் வரவேற்பு பெறப்பட்டுள்ளது.