February 27, 2018
தண்டோரா குழு
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு புத்தாண்டன்று துவங்கியது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங், மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மார்ச் 5ம் தேதி வெளியாகும் என இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.