• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜிஎஸ்டி வரிக்கு விஜய், அஜித் குரல் கொடுக்காதது ஏன்? ஜெயம் ரவி!

July 7, 2017 tamilsamayam.com

ஜிஎஸ்டி வரிக்கு எதிராக நடிகர்கள் விஜய், அஜித் குரல் கொடுக்காதது ஏன் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்கும் வகையில் ஜிஎஸ்டி சரக்கு, சேவை வரி சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

திரையரங்குகளில் சினிமா டிக்கெட் விலை உயர்வு அதிலும் சினிமா தியேட்டர்களுக்கு 28 சதவீதம் வரி விதித்துள்ளது மத்திய அரசு. இத்துடன் தமிழக அரசு கேளிக்கை வரியாக 30 சதவீதம் விதித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக நடிகர்கள் விஜய், அஜித் குரல் கொடுக்காதது வருத்தம் அளிப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜெயம் ரவி கூறுகையில்,

“ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தமிழ் திரைத்ததுரைக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதன் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

விஜய், அஜித் போன்ற பிரபல நடிகர்கள் ஜி.எஸ்.டிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. திரையுலக்கிற்கு பிரச்சினை ஏற்பட்டால் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தமிழ் திரை உலகினரிடையே ஒற்றுமை இல்லை”. என்றார்.

மேலும் படிக்க