March 23, 2018
தண்டோரா குழு
இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் நடிகரான தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளது. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான நாச்சியார் படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் 17 வருடங்களுக்கு பிறகு ராஜூவ் மேனன் இயக்கும் ‘சர்வம் தாள மயம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக ‘8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். மைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மேகாலயாவில் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.