May 24, 2018
தண்டோரா குழு
காவிய தலைவன் படத்தை இயக்கிய வசந்தபாலன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்கவுள்ளது.
ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் பசங்க படம் புகழ் பாண்டி, ஜெனிபர் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்நிலையில், ஆர்யாவை வைத்து நடந்த ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் பதிந்த அபர்ணதி தான் இப்படத்தின் நாயகியாக நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.