December 29, 2017
தண்டோரா குழு
‘கீ’ படத்தில் தற்போது நடித்து வரும் ஜீவா, அந்த படத்தினை அடுத்து ‘மகாபலிபுரம்’ படத்தை இயக்கிய டான் சாண்டி இயக்கத்தில் ஓர் படத்தினை நடிக்கவுள்ளார் என்றும், அதில் அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்த ஷாலினி பாண்டே நடிக்கவுள்ளார் என்றும் நாம் ஏற்கனவே அறிந்த செய்தி.
இப்படத்திற்கு தலைப்பு வைக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இது குறித்து ஓர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘கொரில்லா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றும், யோகி பாபு, ஆர்.ஜெ.பாலாஜி இருவரும் இதில் காமெடியனாக கமிட் ஆகியுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் ஜீவாவின் 29வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.