November 27, 2017
தண்டோரா குழு
நாச்சியார் டீசரில் கெட்டவார்த்தை பேசியது தொடர்பாக ஜோதிகா, பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாலா, இயக்கி தயாரிக்கும் படமான நாச்சியார் படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடித்துள்ள்ளார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் ஜோதிகா டீசரின் முடிவில் கெட்டவார்த்தை பேசியிருப்பார். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, ஜோதிகா மற்றும் பாலா மீது கோவை, மேட்டுபாளையத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சி சார்பில் ஜோதிகா மற்றும் பாலா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.