May 5, 2018
தண்டோரா குழு
இந்தியாவின் முதல் விண்வெளி படமான “டிக் டிக் டிக்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நேமிசந்த் ஜபக் தயாரிப்பில் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டிக் டிக் டிக்’.இந்தியாவில் முதல் முறையாக விண்வெளியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும், ஜெயம் ரவியின் மகன் ஆரவ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜூனன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் ரிலீசாக இருந்த இப்படம் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தள்ளிப்போனது,இந்நிலையில் தற்போது படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளது அதன்படி வரும் ஜூன் மாதம் 22ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.