August 3, 2017
tamilsamyam.com
டிடிஎச் விளம்பரத்தில் நடிக்க நயன்தாரா ரூ. 5 கோடி சம்பளம் வாங்கியிருக்கிறாராம்.
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. தற்போது இமைக்கா நொடிகள், அறம், கொலையுதிர் காலம், வேலைக்காரன் மற்றும் தெலுங்கு படம் ஒன்றிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் டிடிஎச் விளம்பரத்தில் வெறும் 50 வினாடிகள் நடிப்பதற்கு சம்பளமாக ரூ.5 கோடி வாங்கியிருக்கிறாராம்.
ஆனால், இந்த விளம்பரத்திற்கு 2 நாள் மட்டும் தான் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். ஆனால், கடையில் இவரது டோரா படம் தோல்வியை தழுவிய போதிலும் தற்போது ரூ.5 கோடி வாங்கியிருப்பது ஹீரோக்களை வாய்பிளக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.