April 17, 2018
tamilsamayam.com
ஜீ தமிழில் ‘அழகிய தமிழ் மகள்’ தொடரில் நாயகியாக நடித்து வருபவர்தான் ‘டூலெட்’ படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
நடிகை ஷீலா நாயகியாக நடித்த முதல் படம் ‘டூலெட்’.இந்தப் படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.இந்தப் படத்தை ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ளார்.இந்த படத்தின் நாயகி யார் தெரியுமா? ஜீ தமிழ் சேனலில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘அழகிய தமிழ் மகள்’ தொடரின் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ஷீலா.இவர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் தான் ‘டூலெட்’.இந்தப் படத்தில் இவர் மேக்அப் இல்லாமல் எளிமையான நடுத்தர குடும்பத்து பெண்ணாக நடித்திருந்தார்.
பல சர்வதேச படவிழாக்களில் ‘டூ லெட்’ திரையிடப்பட்டபோது ஷீலாவின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.ஷீலாவுக்கும் பட வாய்ப்புகள் வருகிறது.‘அழகிய தமிழ் மகள்’ தொடர் பாதிக்காத வகையில் தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஷீலா. இவருக்கு ஏற்கெனவே திருமணமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.