December 30, 2017
தண்டோரா குழு
தமிழில் காதல் காதல் கண் கட்டுதே’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அதுல்யா ரவி. இப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது. மேலும் இவருக்கு அதிக ரசிகர்களும் கிடைத்தனர்.
சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான ஏமாலி’ என்ற படத்தின் டீசர் வெளியானது.அதில் அவரது கதாபத்திரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், தன்னுடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பை அதுல்யா வெளியிட்டுள்ளார்.
தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும் படத்தை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் இயக்குநர் சுசீந்திரன் முதன்முறையாக ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ திரைப்படத்தில் நடிக்கிறார். இதில் மிஷ்கின், விக்ராந்த் ஆகியோர் இணைந்து நடிக்கும் இப்படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார்.
இப்படத்தில் தானும் நடிக்கவுள்ளது பெருமையாகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளதாக அதுல்யா தெரிவித்துள்ளார்.