December 25, 2018
தண்டோரா குழு
பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘மாரி 2′ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு தனுஷின் அசுரன் படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது.
வெற்றி மாறன் இயக்கவுள்ள இப்படம் வெக்கை’ என்ற நாவலின் தழுவலாம். இந்த படத்தை ‘V கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது.
இந்நிலையில், இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. 8 வருடங்களுக்கு பின் தனுஷ் ஜீவி பிரகாஷ் கூட்டணி ஜெயில் படத்திற்காக ஒன்றிணைந்தது குறிப்பிடத்தக்கது.