September 15, 2018
தண்டோரா குழு
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வடசென்னை, என்னை நோக்கி பாயும் தோட்ட ஆகிய படங்களில் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதற்கிடையில் தனுஷ்,
நடிகர் மட்டுமல்லாது பாடகர், பாடலாசிரியர் என பல அவதாரங்களை எடுத்து அதில் வெற்றி கண்டுள்ளார்.
இதுமட்டுமின்றி ராஜ்கிரணை வைத்து வித்யாசமான கதையை இயக்கி ‘பவர் பாண்டி’ படத்தை எடுத்து, அதிலும் வெற்றியை அடைந்தார். இதனைத்தொடர்ந்து தனுஷ் அடுத்ததாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனது இரண்டாவது படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தற்போது தான் இயக்கும் இரண்டாவது படத்தின் வேலைகளை துவங்கிவிட்டார். தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்கும் படத்தை தனுஷே இயக்கி, நடித்து வருகிறார்.இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா, சரத்குமார், ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, அதிதி ராவ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
தற்போது, இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க அனு இம்மானுவேல் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.