June 14, 2018
தண்டோரா குழு
பொல்லாதவன், ஆடுகளம் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன்தனுஷ் கூட்டணியில் உருவாகி படம் வடசென்னை.மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.
வடசென்னையை மையப்படுத்திய இந்தக் கதையில் சமுத்திரக்கனி, அமீர், ‘ஆடுகளம்’ கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,வடசென்னை படத்தின் முதல் பாகம்ட்ரைலர்ஜூலை 28 தேதி வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தனுஷ் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.