January 26, 2019
தண்டோரா குழு
பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘மாரி 2′ அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு பிறகு தனுஷின் அசுரன் படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது.
வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கலைபுலி தாணு தயாரிக்கும் இப்படத்தை வெற்றி மாறன் இயக்கவுள்ளார். இப்படம் வெக்கை’ என்ற நாவலின் தழுவல் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். ஆடுகளம், பொல்லாதவன், மயக்கம் என்ன படத்தை தொடர்ந்து ஜீவி பிரகாஷ் நான்காவது முறையாக தனுஷின் அரசுரன் படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
மேலும், இப்படத்தின் தனுஷிற்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.