January 11, 2019
தண்டோரா குழு
தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் தெலுங்கு சூப்பர் ஹீரோவுமான சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “வினயை விதேயா ராமா”.
‘பாரத் என்னும் நான்’ படத்தை இயக்கிய போயப்பட்டி சீனு இயக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், சினேகா,மதுமிதா,முகேஷ் ரிஷி,ஜெபி,ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாஹசம், என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக “வினயை விதேயா ராமா” உருவாகியுள்ளது. இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் சண்டை காட்சி படமாக்க மட்டும் பதினோரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
டிவிவி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் “வினயை விதேயா ராமா”பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாகிறது.