August 1, 2017
tamilsamayam.com
அனைத்து படங்களின் கலவையாக உருவான படம் சிவா நடித்து வெளியான ‘தமிழ் படம்’. இதில் நடிகர் சிவா, திஷா பாண்டே, எம் எஸ் பாஸ்கர், மனோ பாலா, வெண்ணிறாடை மூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படத்தின் 2ம் பாகத்தை எடுக்க தற்போது பேச்சுவார்த்தை நடந்துவருவது உண்மை தான் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தில் ஓவியாவை ஹீரோயினாக நடிக்க வைக்க எண்ணம் உள்ளதாகவும், ஆனால் அவர் பிக் பாஸ் வீட்டில் இருப்பதால், அவர் வெளியே வந்த பின்னர் இதுகுறித்து பேசுவது தான் சரியாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விரைவில் பேச உள்ளதாக தமிழ் படம் இயக்குனர் அமுதன் கூறியுள்ளார்.