• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ் படங்களில் முத்தக் காட்சிகளுக்கு தடை விதிப்பது ஏன்? – அரவிந்த் சாமி

December 15, 2017 தண்டோரா குழு

தமிழ் படங்களில் முத்தக் காட்சிகளுக்கு தடை விதிப்பது ஏன்? என நடிகர் அரவிந்த்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம்(NFDC) மற்றும் இண்டோ சினி அப்ரிஷியேஷன் ஆகியவை இணைந்து நடத்தும் சர்வதேச திரைப்பட விழா ஆண்டு தோறும் சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான 15வது சர்வதேச திரைப்பட விழா, சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த விழாவை நடிகர் அரவிந்த்சாமி துவக்கி வைத்து பேசினார்.

பின்னர் விழாவில் பேசிய நடிகர் அர்விந்த் சாமி,

தற்போது உள்ள காலகட்டத்தில் ஒரு படம் எடுப்பது என்பது எளிதான ஒன்று தான். ஆனால், அந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வாங்குவது தான் கடினமாக உள்ளது. கிட்டத்தட்ட 2 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாட்ஸாயனா காமசூத்திரத்தைப் பற்றி எழுதி வைத்தார். பல்வேறு உள்ளடக்கங்களைக் கொண்டுள்ள இந்தப் படைப்பு பாலுணர்வு தொடர்பான ஒரு இலக்கியமாகவே இன்றும் போற்றப்படுகிறது.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஒரு சாதாரண முத்தக்காட்சிக்கு கஷ்டப்பட வேண்டியிருக்கு. தமிழ் படங்களில் முத்தக் காட்சிகளுக்கு தடை விதிப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர் காதல் காட்சிகளை விட பெண்களுக்கு எதிரான வன்முறைக் காட்சிகள் தான் இன்றைய படங்களில் அதிகமாக காட்டப்படுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க