January 21, 2019
தண்டோரா குழு
தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை என அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் முன்னிலையில் நேற்று சிலர் பாஜக கட்சியில் இணைந்தனர். அப்போது பேசிய தமிழிசை, அஜித்தை போன்று அவரது ரசிகர்களும் நல்லவர்கள் அஜித் ரசிகர்கள்தான் தமிழகத்தில் பாஜகவை பரப்ப வேண்டும் என்றெல்லாம் பேசியுள்ளார்.
இந்நிலையில், நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை. அரசியல் திரைப்படங்களில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளேன். கடமையைச் செவ்வனே செய்வதையே ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன். சராசரி பொதுஜனமாக வரிசையில் நின்று வாக்களிப்பதே அதிகபட்ச அரசியல் தொடர்பு. எனது திரைப்படங்களில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளேன். கடமையைச் செவ்வனே செய்வதையே ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன். என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ளேன் என அஜித் அறிக்கை ஒன்றை
வெளியிட்டுள்ளார்.
மேலும். அதில், நான் சினிமாவில் தொழில் முறையாக வந்தவன். நான் அரசியல் செய்யவோ மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் நான் வலியுறித்திகிறேன். அரசியல் சார்ந்த எந்த ஒரு வெளிபாட்டை நான் தெரிவிப்பதில்லை. என் ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சமூக வலைதலங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்று பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை. எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும். தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம் ஒழுங்கை மதித்து நடந்துக்கொள்வதும் ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும்,வேன்றுமை கலைந்து ஒற்றுமையுடன் இருப்பது, மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும் ஆகியவை தான். அதுவே நீங்கள் செய்யும் அன்பு வாழு வாழ விடு என கூறியுள்ளார்.