June 10, 2017
தண்டோரா குழு
கெளதம் மேனன் இயக்கதில் சிம்புவின் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்தில் சிம்புவின் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார்.
அப்படத்தில் வடநாட்டு பெண்ணாக வந்தாலும் இவருக்கு சொந்த ஊர் கேரளா தான், அப்பா மலையாள சினிமா உலகில் முன்னணி ஒளிப்பதிவாளரான மோகன் அம்மா பிரபல நடன கலைஞர், பிறந்தது கேரளா என்றாலும் படித்ததெல்லாம் சென்னை தான்.தன்னுடைய முதல் படத்திலே அனைவரையும் கவர்ந்த இவர் தற்போது விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘சத்திரியன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் விளம்பரத்திற்க்காக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மஞ்சிமாவிடம் உங்களுக்கு எந்த ஹிரோ பிடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படம் போல் எந்த ஹீரோவோடையாவது பைக்கில் ஊர் சுற்ற ஆசையாக உள்ளது என்று கேட்டுள்ளனர்.
அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் அஜித் என்று கூறினார். ஏன் என்று மீண்டும் கேள்வி கேட்க, இதென்னங்க கேள்வி ‘தல’ அஜித் என்றாலே சினிமா துறையில் உள்ள பல கதாநாயகிகளுக்கும் படிக்கும் என்றார்.
மேலும், எல்லோரும் அஜித்துடன் ஏதாவது ஒரு படத்திலாவது இணைந்து நடித்துவிட வேண்டும் என நினைப்பார்கள். அந்த ஆசை எனக்கும் உண்டு. அதுமட்டுமல்லாமல் அவருடன் பைக்கில் ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆசையும் உள்ளது என்று கூறினார்