சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் தொடர்ந்து நான்கு படங்கள் நடித்தார். இவர்களது கூட்டணியில் சமீபத்தில் வெளியான விஸ்வாசம் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக சதுரங்கவேட்டை, தீரன் பட புகழ் எச். வினோத் இயக்கும் இப்படத்தில் நடிக்கவுள்ளார். நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இப்படம் பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.
அண்மையில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. எனினும் அஜித் பெயர் மட்டும் படத்தில் நடிப்பது உறுதியாக வெளியானது. மற்ற கலைஞர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியானது.
இந்நிலையில், தயாரிப்பாளர் போனி கபூர் படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரத்தை அதிகாரபூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளார்.
நடிகர்கள்
ஆதிக் ரவிச்சந்திரன்
அஷ்வின் ராவ்
அர்ஜுன் சிதம்பரம்
ரங்கராஜ பாண்டே
சுஜித் ஷங்கர்
நடிகைகள்
வித்யா பாலன்
ஸ்ரத்தா ஸ்ரீநாத்
கீர்த்தி குல்ஹாரி
ஆண்ட்ரியா தாரைங்
அபிராமி வெங்கடாச்சலம்
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு- நிரவ் ஷா
கலை இயக்குனர்- கதிர்
சண்டை இயக்குனர்- திலீப் சுப்புராயன்
எடிட்டர்- கோகுல் சந்திரன்
உடைகள் – பூர்ணிமா ராமசாமி
இசை – யுவன் ஷங்கர் ராஜா
இப்படம் வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தன ஆகர்ஷன மகாலட்சுமி குபேரர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் கோவை மத்திய மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தர்ட் ஐ அமைப்பின் ஆட்டிசம் விழிப்புணர்வு காணொளியை வெளியிட்ட நடிகை கெளதமி
ஆகாஷ் நிறுவனம் சார்பாக ஜே.இ.இ. தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆகாஷ் இன்விக்டஸ் எனும் புதிய பாடத்திட்டம் கோவையில் அறிமுகம்
கோவையில் சூயஸ் இந்தியா சார்பில் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம்