September 18, 2017
தண்டோரா குழு
நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் சூர்யாவை வைத்து படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சூர்யாக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படம் 1980ம் ஆண்டு காலகட்டத்தை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. சூர்யா ரசிகர்கள் இப்படத்தின் டீசர் வெளிவரும் என்று பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அண்மையில் அதிகாரப்பூர்வமாக ஒரு போஸ்டருடன் வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். மேலும், இதனுடன் டீஸர் மற்றும் ட்ரைலர் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.