November 27, 2019
திரைப்பட நடிகர் பாலாசிங் (67) உடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் காலமானார்.
நாசர் இயக்கி நடித்த ‘அவதாரம்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பாலா சிங். பிரபலமான நாடகக் கலைஞரான இவர் தமிழ் திரையுலகில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துப் பிரபலமானவர்
‘இந்தியன்’, ‘ராசி’, ‘புதுப்பேட்டை’, ‘விருமாண்டி’ உள்ளிட்ட பல படங்களில் இவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. ‘என்.ஜி.கே’ படம் இவரது நடிப்பில் வெளியான 100-வது படமாகும். இவரது நடிப்பில் இறுதியாக ஆர்யா நடித்த ‘மகாமுனி’ படம் வெளியானது.
இந்நிலையில், இவருக்கு சில தினங்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில்,
திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு தங்கலீலா என்ற மனைவி இருக்கிறது. ஓசின் என்ற மகளும், சிபின் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்த திடீர் மறைவு குடும்பத்தினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாசர் ஏ;உத்தி இயக்கி நடித்த அவதாரம் படம் மூலம் தமிழில் நடிகர் பாலாசிங் அறிமுகமானார். இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே., மகாமுனி உள்ளிட்ட பல படங்களில் பாலாசிங் நடித்துள்ளார்