May 19, 2018
tamilsamayam.com
நடிகர் ரஜினிகாந்த் 78 வயது ரசிகையை கவுரவித்துள்ளார்.நடிகர் படங்களில் பிசியாக இருந்தாலும், அரசியல் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து கட்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறார்.
திருவொற்றியூரைச் சேர்ந்த திருமதி சாந்தா(78).சாந்தா தீவிர ரஜினி ரசிகை.ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அறிவித்ததுமே மகிழ்ச்சியுடன் களமிறங்கினார்.
உறுப்பினர் சேர்க்கை களப்பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ள சாந்தாவின்,விருப்பம்,ரஜினியைச் சந்தித்து பணிகளைச் சொல்ல வேண்டும் என்பது.
இந்த தகவலை ரஜினி மக்கள் மன்றத்தினர் ரஜினியிடம் தெரிவிக்கக், சாந்தாவை தன் இல்லத்துக்கு வரவழைத்து ரஜினிகாந்த்,அவருக்கு பொன்னாடை அணிவித்து,அவரது களப்பணிக்கு கவுரவம் செய்தார்.