July 19, 2018 தண்டோரா குழு
பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான படம் கடைக்குட்டி சிங்கம். தெலுங்கில் சின்னபாபு என்ற பெயரில் வெளியானது. இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்திருந்தார்.
கூட்டுக்குடும்ப வாழ்க்கை பற்றி விவசாயத்தின் பெருமை பற்றியும் பேசிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதற்கிடையில், தெலுங்கில் இப்படத்தை பார்த்த துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வெகுவாக பாராட்டி இருந்தார்.
இப்படம் குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில்,
சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான “சின்னபாபு” (தமிழில் “கடைக்குட்டி சிங்கம்”) திரைப்படத்தைப் பார்த்தேன். கிராமத்து பசுமை பின்னணியில், நம் பழக்க வழக்கங்களை, மரபுகளை மற்றும் வாழ்க்கை முறையை, ஆபாசம் இல்லாமல் காட்டிய சுவாரசியமான நல்ல படம். என கூறியிருந்தார்.
இதற்கு நடிகர் கார்த்தி, நம் நாட்டு மரபு, குடும்ப உறவுகள், விவசாயம் இவைதான் காலத்துக்கும் இந்த சமுதாயத்தை காக்கும் என்பதை போற்றும் திரைப்படமாக கடைக்குட்டி சிங்கம் அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டி பாராட்டிய உங்களுக்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் எனக் கூறினார். அதைபோல், நடிகர் சூர்யா, நாட்டின் மிகப்பெரிய தலைவரான நீங்கள் படத்தை பார்த்து பாராட்டியுள்ளது மகிழ்ச்சியை தந்துள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், படத்தை கொண்டாடிய ரசிகர்களுக்கு நன்றியும தெரிவித்துள்ளார்.