September 11, 2017 தண்டோரா குழு
கவுதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், துருக்கியின் எல்லை பகுதி அருகே சென்ற படக்குழுவினரை திடீரென்று அங்கிருந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இயக்குநர் கவுதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில்,
துருக்கியில் வசிப்பவர்கள் யாரேனும் தங்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அவர்ட்வீட் செய்த சில நிமிடங்களிலே இப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“துருக்கி நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான துருக்கி ஏர்லைன்ஸ் தமிழ்த்திரைப்படக் குழு பிரச்சினையில் உடனே தலையிட்டு படக்குழுவை துருக்கிக்குள் அழைத்துச் செல்ல சம்மதித்தனர்.
இந்திய நிறுவனமான பிளேமிங்கோ டிராவல்ஸ் மற்ரும் ஜார்ஜிய நிறுவனம் ஒன்றிணைந்து துருக்கிய அதிகாரிகளிடம் பேசி பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
தற்போது படக்குழு இஸ்தான்புல் நகரத்தை அடைய தயாராக உள்ளது. துருக்கி மற்றும் இந்தியக் குழுவினர் இந்தச் சிக்கலை சுமுகமாகத் தீர்த்தததில் மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்” என்று தெரிவித்துள்ளது.