June 28, 2017
தண்டோரா குழு
விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘துருவ நட்சத்திரம்’.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்து வரும் படம் இந்த படத்தில் தற்போது சிம்ரன் மற்றும் பார்த்திபன் நடிக்க போகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சிம்ரன், பார்த்திபன் இருவரும் முக்கிய கதாபாத்தில் நடிக்கவுள்ளர்களாம். இதற்காக இருவரிடமும் கௌதம் கால்ஷீட் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கடைசியாக சூர்யாவை வைத்து கௌதம் இயக்கிய ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் சிம்ரன் சூர்யாவின் ஜோடியாக நடித்திருப்பார். அதன் பின்பு சிம்ரன் மீண்டும் திரையில் தோன்றப்போவது இப்படத்தில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.