ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு, மும்பையில் பூஜையுடன் தொடங்கியது.
கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. மும்பையை கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கியது.
இப்படத்தை ரஜினியின் 2.O படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே தயாரிக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகம் என படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இலவச உடல் பரிசோதனை திட்டம் அறிமுகம்
கல்வியில் அரசியலை புகுத்த வேண்டாம் – கோவையில் ஜிகே வாசன் பேட்டி
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO) சார்பில் ஆர்ப்பாட்டம்
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !