May 18, 2018
தண்டோரா குழு
விஸ்வாசம் படத்தில் தல அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
சிவா-அஜித் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணையும் படம் விஸ்வாசம்.இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைப்பெற்று வருகிறது.இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும், அதில்,ஒன்று தான் வயதான தோற்றம் என்றும் கூறப்படுகிறது.இதையடுத்து,உடல் முழுவதும் எடையை குறைத்த பிறகு இளமையான தோற்றத்தில் அஜித் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
பாலிவுட்டில் அமீர்கான் நடித்த தங்கல் படத்தில் முதலில் வயதான தோற்றத்தில் தொப்பையுடன் இருக்கும் கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு நடந்தது.இதையடுத்து,உடலை குறைத்து இளமையாக நடித்தார். தற்போது தல அஜித்தும் இதே வழியை பின்பற்றி நடிக்கயிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.