ஏ.ஆர். முருகதாஸின் சர்கார் படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இக்கூட்டணி தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, கதிர், விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதற்கிடையில் தளபதி 63 படம் குறித்து ஏதாவது அறிவிப்பு வெளியாகுமா? என விஜய் ரசிகர்கள் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியின் விஜய் ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இதையடுத்து “ 21ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு படத்தின் பெயருடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்றும் 22ஆம் தேதி காலை12மணிக்கு இரண்டாவது லுக் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு “பிகில்” என பெயரிடப்படுள்ளது. நாளை படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராக்ஸ் பாட்மிண்டன் அகாடமியின் கூட்டுமுயற்சியால் தேசிய மற்றும் உலக அளவில் ஜொலிக்கும் இளம் வீரர்கள்!
சசி கிரேட்டிவ் கல்லூரியில் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் மற்றும் வடிவமைப்பாளர்கான விருது
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் 19வது புதிய மண்டல அலுவலகம் கோவையில் திறப்பு !
மார்ச் 2025-ல் 7,422 கார்களை விற்று மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை ஸ்கோடா படைத்துள்ளது
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது