May 8, 2018
தண்டோரா குழு
பாலிவுட் நடிகையான சோனம் கபூரின் திருமணம் இன்று மும்பையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையான சோனம் கபூர் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார்.இந்நிலையில் இவர்களது திருமணம் இன்று மும்பையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு கபூர் இல்லத்தில் நடக்கும் முதல் திருமணம் என்பதால் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.மேலும்,சோனம் கபூர் – ஆனந்த் அகுஜா திருமணம் பந்தரா பகுதியில் உள்ள ராக்டாலிலும்,மாலை லீலா ஹோட்டலில் பிரமாண்டமாக திருமண வரவேற்பும் நடைபெறவுள்ளது.