February 26, 2018
தண்டோரா குழு
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த போது மாரடைப்பால் நேற்று முன்தினம் காலமானார்.
ஸ்ரீதேவியின் உடல் தற்போது துபாய் அல் குவாசிஸ் பகுதியில் உள்ள காவல்துறை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் முழு அறிக்கை தாமதமான காரணத்தினால், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று துபாய் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலைக்குள் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக அம்பானிக்கு சொந்தமான தனி விமானம் ஒன்று துபாய் விரைந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவரது உடலை நாளை தகனம் செய்ய ஸ்ரீதேவி வீட்டார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.