January 24, 2019
தண்டோரா குழு
முன்னணி நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவது தற்போது வாடிக்கையாகிவிட்டது. ஒரு சில நடிகைகள் தங்களின் டாப்லெஸ், நிர்வாண புகைப்படங்களை அவர்களே தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுகின்றனர். ஆனால் சில நடிகைகளின் கவர்ச்சி படங்கள் மார்ஃபிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
தமிழில் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்ஷிகா. விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து விட்ட இவர் தற்போது மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்து வாய்ப்பு கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் டூ பீஸ் கவர்ச்சி படங்கள் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படங்கள் அவரது செல்போனில் இருந்து வெளியானதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஹன்சிகா கூறும்போது,’
எனது டுவிட்டர் மற்றும் செல்போனை யாரோ முடக்கி அதற்குள் நுழைந்து தவறான புகைப்படங்கள் மெசேஜ்களை பகிர்ந்திருக்கின்றனர். ஆகையால் என்னுடைய சமூக வளையதள பக்கங்களில் இருந்து தவறுதலாக ஏதாவது பதிவானால் அதற்கு பதில் அளிக்காதீர்கள் என கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் இதே நடிகை அக்ஷராவின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.