April 24, 2018
tamilsamayam.com
நயன்தாரா நடிப்பில் கேங்ஸ்டர் காமெடி படம் ஒன்று வரப்போகிறது.நடிகை நயன்தாரா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.இந்த வகையில் ஒரு காமெடி படத்தில் நடக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நிவின்பாலி நாயகனாக நடிக்கும் ‘லவ் ஆக்ஷன் டிராமா’ மலையாள படத்தில், நிவின்பாலியுடன் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படம் மே மாதம் தொடங்க இருக்கிறது.இதன் டி.வி. உரிமை இப்போதே பெரிய தொகைக்கு விற்கப்பட்டுவிட்டது.
இந்தப் படத்துக்குப் பின்,நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘கோட்டயம் குர்பானா’ மலையாள படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளார். கதாசிரியர் ஆர்.உன்னி எழுதியுள்ள இந்த படம் கலகலப்பான கேங்ஸ்டர் காமெடி படமாக அமையும் என்று கூறப்படுகிறது.இதில் நயன்தாரா காமெடியில் கலக்கப்போகிறாராம்.